ஆந்திராவில் ஆட்சியை பிடித்தது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்: மண்ணை கவ்விய சந்திரபாபு நாயுடு
மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழக்கின்றது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தற்போது 142 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் முதல்முறையாக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநிலத்தின் முதல்வராகிறார். மத்தியில் புதிய ஆட்சியை உருவாக்கும் கிங்மேக்கர் என்று போற்றப்பட்ட சந்திரபாபுநாயுடு கடைசியில் சொந்த மாநிலத்திலேயே ஆட்சியை பறிகொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் அவரது தெலுங்கு தேச கட்சி 28 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது
அதுமட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலிலும் 24 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது