வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 அக்டோபர் 2024 (14:24 IST)

பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்..!

கர்நாடக மேல் சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பாஜகவின் யோகேஸ்வரா திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 
கர்நாடக மாநிலத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், சன்னபட்னா தொகுதியில் அடுத்த மாதம் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில், இந்த தொகுதியை பாஜக தனது கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டுக் கொடுத்தது. இந்த தொகுதியை தனக்கு வேண்டும் என்று யோகேஸ்வரா வேண்டுகோள் விடுத்த நிலையில், அவர்ன்சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று கூறினார்.
 
இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் அவருக்கு சீட் வழங்க விரும்பியது. ஆனால், அதை நிராகரித்த யோகேஸ்வரா திடீரென பாஜக சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவி  உள்பட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சன்னபட்னா தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran