தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்? புதிய கவர்னர் இவரா?
தமிழக கவர்னர் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், அவருக்கு பதிலாக புதிய கவர்னர் நியமனம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக கவர்னராக கடந்த சில ஆண்டுகளாக ஆர். என். ரவி இருந்து வரும் நிலையில், அவருக்கும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட, தூர்தர்ஷன் விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது 'திராவிடர்' என்ற வரியை விட்டு பாடியது பெரும் சர்ச்சையாகும். இதனால் கவர்னர் மீது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடும் கண்டனத்தை முன் வைத்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின்படி தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மாற்றம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக முன்னாள் ராணுவ அதிகாரி ஜெனரல் வி. கே. சிங் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்னும் ஒரு நாளில், தமிழகத்திற்கு புதிய கவர்னர் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பல தேர்தல்களில் பாஜக மேலிட பொறுப்பாளராக பணியாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் வி. கே. சிங் புதிய கவர்னராக வந்தால், அவருக்கும் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் இடையே உள்ள உறவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva