ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (13:45 IST)

உலக கோடீஸ்வரர் பட்டியல்.. டாப் 10ல் இருந்து வெளியேற்றப்பட்ட அதானி..!

adani
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியாவின் கௌதம் அதானி தற்போது டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் பயங்கரமாக சரிந்தன. 
 
இந்த நிலையில் அதானி நிறுவனங்களில் பங்குகள் கடந்த சில நாட்களில் 84 பில்லியன் டாலர் குறைந்து விட்டதாகவும் இதனை அடுத்து அவர் உலக பில்லியனர் பட்டியலில் 11வது இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது
 
கடந்த சில  வாரங்களுக்கு முன்னர் இரண்டாம் இடத்தில் இருந்த அதானி, அதன் பிறகு மூன்றாவது இடத்தில் இருந்தார். இந்த நிலையில் மூன்றாவது இடத்தில் இருந்து தற்போது 11 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran