1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (20:39 IST)

'அதானி நிறுவனத்தில் முதலீடு' செய்தது குறித்து எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம்

LIC insurance
இந்தியாவில், கப்பல்துறைமுகம், ஆயில், டெலிகாம், ஐபிஎல் என அனைத்துத்துறைகளிலும் முன்னணி தொழிலதிபராக வலம் வருபவர் அதானி.

அதானி குழுமம் கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் பெரும் வளர்ச்சி பெற்று உலக பணக்காரர்களில் மூன்றாவது இடத்தையும் அதானி பிடித்தார்.

இந்நிலையில் அதானி குழுமத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு அவர்கள் செய்த மோசடியே காரணம் என கூறி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் அதானி குழுமத்தில் பங்கு முதலீடு செய்த எல்.ஐ. நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.

இதுகுறித்து இன்று எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், ''பல்வேறு சமயங்களில்  காலக்கட்டங்களில் அதானி குழும்பத்தில்) நாங்கள்(எல்.ஐ.சி நிறுவனம்  ரூ.36,474 கோடி முதலீடு செய்திருந்தோம்.

கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அதானி குழுமத்தில் முதலீடு செய்த  நிறுவனத்தின் மதிப்பு ரூ.56,142 கோடியாக இருந்தது.

தற்போது எல்.ஐ.சி நிறுவனத்தின் மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.41.66 லட்சம் ஆகும்,

.அதானி குழும்பத்தில் நாங்கள் முதலீடு செய்துள்ள அனைத்தும் காப்பீட்டு ஆணைய  ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டுத்தான் முதலீடு செய்திருக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளது.