வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (14:06 IST)

ஒமிக்ரான் கொரோனா தொற்று: பூஸ்டர் கட்டாய்மாக்கப்படுமா?

ஒமிக்ரான் தொற்றால் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்று தகவல்.

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், மேற்கு வங்காளம், தெலுங்கானா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் தொற்று பரவி 70 பேருக்கும் அதிகமாக ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. 
 
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது அவசியமானது என அறிவுறித்தப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் மிக வேகமாக பரவும் தன்மை உள்ளதால் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்வதையும் உலக நாடுகள் ஊக்கப்படுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.