1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (14:02 IST)

தமிழகத்திற்கு படையெடுத்து வரும் மோடி-அமித்ஷா.. தலையே காட்டாத ராகுல், சோனியா..!

தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழ்நாட்டு பக்கமே இன்னும் வராமல் இருப்பது அக்கட்சியின் தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், புதுவையில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் நிலையில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனால் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மற்றும் அமித்ஷா அடுத்தடுத்து தமிழகம் வர இருக்கும் நிலையில் தமிழக பக்கம் ராகுல் மற்றும் சோனியா காந்தி பிரியங்கா காந்தி ஆகியோர் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேர்வில் ஏற்கனவே சொதப்பல் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தான் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் கூட அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் பிரச்சாரத்திற்கு தேசிய தலைவர்கள் யாரும் வராமல் இருப்பது காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் இல்லாமல் இருக்கும் நிலையில் இனி வரும் நாட்களிலாவது ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Edited by Siva