ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (12:11 IST)

டிஆர் பாலுவின் மகள் பாஜகவில் இணைகிறாரா? திமுகவுக்கு அதிர்ச்சி..!

டிஆர் பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணி என்பவரை பாஜகவில் இணைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் டிஆர் பாலு என்பதும் கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே இவர் திமுகவின் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டிஆர் பாலு தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் நிலையில் அவரது மகன் டி ஆர் பி ராஜா ஏற்கனவே அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிஆர்  பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணியை பாஜகவுக்கு இழுக்க  தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் டி ஆர் பாலுவுக்கும் மனோன்மணிக்கும் தற்போது ஒற்றுமையான சூழ்நிலை இல்லை என்றும் கூறப்படுகிறது..
 
ஏற்கனவே திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் உள்ள நிலையில் டி ஆர் பாலுவின் மகளும் பாஜகவில் இணைவாரா? அதனால் திமுகவுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது குறித்த செய்தி இணையத்தில் கசிந்து வரும் நிலையில் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.,


Edited by Siva