1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (13:42 IST)

WHO கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம்?

உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
இதனிடையே மத்திய அரசு கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதி அளித்திருந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.  
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ நிபுணர்களின் கூட்டம் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி நடையப்பெறும் நிலையில் இக்கூட்டத்தில் கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது இது தாமதமாகக்கூடும் என தெரிகிறது. 
 
ஆம், உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி தொடர்பாக மேலும் சில தகவல்களை இம்மருந்தை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதர அமைப்பு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.