1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 15 ஜூலை 2020 (06:48 IST)

இந்தியாவில் திடீரென செயலிழந்த வாட்ஸ்-அப்: பெரும் பரபரப்பு

இந்தியா உள்பட ஒருசில நாடுகளில் திடீரென 3 மணி நேரம் வாட்ஸ்அப் செயலிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உலகம் முழுவதும் மிக அதிகமானோர் பயன்படுத்தும் மெசஞ்சர் செயலி வாட்ஸ்அப் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த செயலியில் மில்லியன் கணக்கானோர் பயனாளிகளாக உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் நேற்று திடீரென இரவு 11.30 மணிக்கு வாட்ஸ்அப் இயங்காமல் போய்விட்டதாக பலர் புகார் அளித்தனர் 
 
இதுகுறித்து வாட்ஸ்அப் எந்தவிதமான விளக்கத்தையும் கொடுக்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ்அப் இயங்காமல் இருக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளது. உலகம் முழுக்க இந்தியா மட்டுமின்றி லண்டன், அமெரிக்கா, இலங்கை, பிரேசில், நெதர்லாந்து, ஜெர்மனி, எகிப்து ஆகிய நாடுகளிலும் வாட்ஸ் அப் செயலிழந்தது என்றும் கொலம்பியா, கஜகஸ்தான், ஸ்வீடன், ரோமானியா, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் வாட்ஸ்அப் செயலியை ஓப்பன் செய்யவே முடியவில்லை என்றும் செய்திகள் வெளியாகியது 
 
கிட்டத்தட்ட உலகம் முழுக்கும் 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் எந்த தொழில்நுட்பம் காரணமாக இயங்காமல் போனது என்பது குறித்து வல்லுனர்கள் கண்டுபிடிக்க முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது
 
ஆனால் மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் வாட்ஸ்அப் இயங்க தொடங்கியதால் அதன் பயனாளிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்