செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (15:37 IST)

நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி!!

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா தொற்றால்  பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பரவிவரும் இந்தத் தொற்றால் இதுவரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிகப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த தொற்றைத் தடுக்க அரசு வரும் ஜூலை 31 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,  சமீபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆகியோருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் இந்தியாவில் சிறந்த நடிகர் அனுபம் கேருக்கும்  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாவதும் அதனால் அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் அவர் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டதாகவும் செய்திகிஅள் வெளியான நிலையில் ரஜினிகாந்தி PRO ரியாஸ் அகமது தனது டுவிட்டர்  பக்கத்தில் உண்மையில்லாத வதந்திகளை நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளார்.