வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 21 ஜூலை 2018 (19:52 IST)

அதிமுக மிக தவறான பாதையை தேர்ந்தெடுத்து விட்டது; மம்தா அதிரடி

நேற்று நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவு அளித்ததை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை வீழ்த்த மிக கடுமையாக செயல்பட்டு வருகிறார். இதற்காக நாடு முழுவதும் எதிர்கட்சி தலைவர்கள் ஒன்றிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். 
 
மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களை கடுமையாக எதிர்த்து வருகிறார். நேற்று நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடந்தது.
 
அதில் அதிமுக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. முன்பே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்காது என்று கூறியிருந்தார். இதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.
 
இந்நிலையில் தற்போது மம்தா பானர்ஜியும் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக மிக தவறான பாதையை தேர்ந்தெடுத்து விட்டது. இதற்கான விலையை அது கொடுத்தாக வேண்டும் என்று கூறியுள்ளார்.