வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (19:05 IST)

செலவுக்கு கூட பணம் இல்லை: நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விஜய் மல்லையா

இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பித்து இங்கிலாந்து நாட்டில் தற்போது இருந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் விஜய் மல்லையா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் எனது சொத்துக்கள் முடக்கப்பட்டன, அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லை என்றும் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் நடந்துவரும் வழக்குகளுக்கு வழக்கறிஞர்களுக்கு ஃபீஸ் கொடுப்பதற்குக் கூட தன்னிடம் பணம் இல்லை என்றும் எனவே பிரான்ஸ் நாட்டில் உள்ள சொத்தை விற்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
இந்த மனுவை தாக்கல் செய்த விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் தனக்கே பல மாதங்களாக அவர் எனக்கு பீஸ் தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது