வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (11:24 IST)

12 - 14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி?

12 - 14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து விரைவில் மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும் என எதிர்பார்ப்பு. 

 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சிறுவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். அதன்படி 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் அடுத்து 12 - 14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது பற்றி  அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என  மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 12 - 14 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து விரைவில் மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.