புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (09:59 IST)

கொரோனா பெருந்தொற்று…. டாப் 10 கோடீஸ்வரர்களின் சொத்து இருமடங்கானது- அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு!

கொரோனா பெருந்தொற்று காலத்தி உலகின்  முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இரட்டிப்பாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் உலகெங்கும் உள்ள மக்கள் தங்கள் பொருளாதார நிலையில் மோசமடைந்து வரும் நிலையில் கோடீஸ்வரர்களின் வருவாய் மட்டும் குறைவதில்லை. மாறாக இரு மடங்காகியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் உள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் ஆக்ஸ்பார்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுபற்றி பேசப்பட்டுள்ளது.

அதில் ‘உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களின் சொத்துமதிப்பு கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பாக 70000 கோடி டாலராக இருந்தது. ஆனால் இப்போது 1.5 லட்சம் கோடி டாலராக ஆகியுள்ளது. ஆனால் 99 சதவீதம் மக்களின் வருமானம் குறைந்துள்ளது. உலகில் உள்ள 310 கோடி ஏழை மக்களின் சொத்துகளைவிட 6 மடங்கு இந்த 10 கோடீஸ்வரர்களிடம் இருக்கிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.