1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Chandhra babu naidu tested corona positive

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி!

சந்திரபாபு நாயுடு
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது என்பது தெரிந்ததே. அதேபோல ஒமிக்ரான் வைரஸும் மிகவும் அதிகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மூன்றாவது அலையில் சில திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அவர் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். மேலும் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு இலேசான கொரோனா அறிகுறி மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
தமிழக ஊர்திகள் அனுமதி மறுத்ததற்கு முறையான காரணம் கூற வேண்டும்: கார்த்தி சிதம்பரம்