அல்பமாய் பால் பாக்கெட்டை திருடிய போலீஸ்: சிசிடிவியால் சிக்கினர்!
உத்தர பிரதேசத்தில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் பால் பாக்கெட்டை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இரண்டு காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பால் விற்பனையகம் வழியாக அதிகாலை நேரத்தில் சென்றவர்கள் மக்கள் நடமாட்டம் இல்லாததை கண்டு விற்பனையகத்தில் உள்ள பால் பாக்கெட்டுகளை திருடி சென்றுள்ளனர்.
இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸாரே மக்களின் கடைகளில் இதுபோல சில்லறை திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.