வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (13:35 IST)

அன்று அனில் கும்ப்ளேவுக்கு அடிபட்டபோது…! – மாணவர்களுடன் மோடி உரை!

நாட்டில் உள்ள மாணவர்களோடு உரையாடிய ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளேவை குறித்து பெருமையாக பேசியுள்ளார் பிரதமர் மோடி.

நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களோடி பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழகத்தை சேர்ந்த 33 மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் கல்வி மற்றும் தேர்வுகள் குறித்து மாணவர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர் ”சந்திரயான் 2 திட்டத்தில் தடுமாற்றம் ஏற்பட்டபோது எதுவுமே எளிதல்ல என்பதை புரிந்து கொண்டேன். விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் சொன்னேன். அவர்களை ஊக்கப்படுத்தினேன். வெற்றியின் முதல் படி தோல்வியே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 2002ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் அனில் கும்ப்ளே காயமடைந்தார். அனைவரும் அவர் விளையாட மாட்டார் என்றே நினைத்தார்கள். ஆனால் காயத்தையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி பந்து வீசினார். அவர் ஊக்கத்துடன் விளையாடியதால் அன்றைய ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்” என புகழ்ந்து கூறியுள்ளார்.