புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (08:56 IST)

இவங்கல்லாம் எந்த நாட்டுல இருந்து படிக்க வராங்கனே தெரியல! – ஜேஎன்யூ அதிர்ச்சி தகவல்!

ஜேஎன்யூவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் குறித்த தகவலில் 82 மாணவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்பதே தங்களுக்கு தெரியாது என கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம், மாணவ அமைப்புகளுக்கிடையே தகராறு என தொடர்ந்து செய்தியாகி வருகிறது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகம். இந்நிலையில் அங்கு வெளிநாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் குறித்த விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ஜேஎன்யூ நிர்வாகம் 301 வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருவதாகவும், அவர்களில் பலர் கொரியா, நேபாளம், சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் 82 மாணவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்த எந்த ஆவணங்களும் நிர்வாகத்திடம் இல்லை என கூறப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தின் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.