எங்க சாதனையை நாங்களே முறியடிப்போம்..! 12 லட்சம் விளக்குகளை தயார் செய்யும் உ.பி!
உத்தர பிரதேசத்தில் தீபாவளி அன்று கின்னஸ் சாதனை படைக்க 12 லட்சம் விளக்குகளை ஏற்றும் நடவடிக்கையில் உத்தர பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது.
ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 24 அன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை அன்று உத்தர பிரதேசத்தில் 12 லட்சம் விளக்குகளை ஏற்றி பிரம்மாண்டம் காட்ட அம்மாநில அரசு தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு தீபோற்சவத்தின்போது, ஒரே சமயத்தில் 9 லட்சம் அகல் விளக்குகளை ஒளிரவிட்டு கின்னஸ் சாதனையை உத்தர பிரதேச அரசு படைத்தது.
இந்தமுறை 12 லட்சம் விளக்குகளை ஏற்றி தங்கள் சாதனையை தானாகவே முறியடிக்க உள்ளது. கடந்த முறை அகல்விளக்குகள் சீக்கிரமாக அணைந்து விட்டதால் இந்த முறை அதிக நேரம் எரியக்கூடிய அளவில் அகல் விளக்குகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த அகல் விளக்குகள் அயோத்தி, லக்னோ, கோண்டா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. புதிய சாதனை படைக்கும் முயற்சியில் உத்தர பிரதேச அரசு தீவிரமாக உள்ளது.
Edited By: Prasanth.K