வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 3 அக்டோபர் 2022 (18:07 IST)

சூப்பர் ஸ்டாரின் ''பதான்'' பட டீசர் பற்றிய தகவல் !

sharuk
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ‘பதான்’ திரைப்படத்தின் டீஸர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் , இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் புதிய படம் பதான். இப்படத்தில் ஷாரருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்து வருகிறார்.

ஷாருக்கான் இந்தி சினிமாவில் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் ஆவதையொட்டி, சமீபத்தில் பாதன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வைரலானது.

இந்த நிலையில், யஷ்ராஜ் பிலிம்ஸின்  50 வது   ஆண்டை( தொடக்கம் 1970)  விழாவை சிறப்பிக்கும் வகையில், வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி, ரிலீசாகவுள்ளதாகவும் குறிப்பிட்டு, இப்படத்தில் ஜான் ஆப்ரகாமின் போன்ஸ்டரையும் சமீபத்தில் படக்குழு ரிலீஸ் செய்தது.
 

இப்படத்தின் அடுத்த அப்டேட் கேட்டு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில்  ஷாருக்கானின் பதான் பட டீசர் ரெடியாகியுள்ளதாகவும், வரும் தீபாவளி பண்டிகையொட்டி, இப்பட டீசர் வெளியாகும் என பிரபல  ஊடகவியலாளர் உமர் சாந்து தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 Edited by Sinoj