1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai meteorological center says about rain

சென்னையின் பல பகுதிகளில் மழை: குளிர்ந்த தட்பவெப்பத்தால் மக்கள் மகிழ்ச்சி!

rain
நேற்று இரவு முதல் சென்னையின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து சென்னை முழுவதும் தற்போது குளிர்ந்த தட்பவெப்பம் நிலவுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
கடந்த சில மாதங்களாக சென்னையில் வெயில் கொளுத்திய நிலையில் வெப்ப தட்ப வெப்பம் காரணமாக மக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடப்பட்டது
 
இந்த நிலையில் தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் தற்போது மிதமான மழை முதல் நல்ல மழை பெய்து வருகிறது 
 
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்து வருவதால் குளிர் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் அடுத்து  இருபத்தி நான்கு மணி நேரத்தில் சென்னையில் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சிவசேனா கட்சி சின்னம் முடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி