சவப்பெட்டியில் இருந்த எழுந்த மூதாட்டி! – உத்தர பிரதேசத்தில் ஆச்சர்யம்

Prasanth Karthick| Last Modified திங்கள், 17 மே 2021 (14:34 IST)
கொரோனாவால் இறந்து விட்டதாக புதைக்க இருந்த சமயத்தில் கடைசி நிமிடத்தில் மூதாட்டி எழுந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பல சிரமங்களை கொரோனா நோயாளிகள் எதிர்கொண்டு வருகின்றனர். நாட்டில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் குறைந்தாலும், பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேசத்திலும் கொரோனாவால் பலர் பலியாகி வருகின்றன. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 76 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை புதைக்க சவப்பெட்டியில் வைத்த போது சில நிமிடங்களில் அவர் கண் விழித்து எழுந்து அமர்ந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :