இந்த நேரத்தில் இப்படி ஒரு செல்பி போடலாமா… RIP போட்டு அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்!

Last Modified திங்கள், 17 மே 2021 (13:44 IST)

நடிகர் மனோ பாலா வெளியிட்ட ஒரு செல்பியால் ரசிகர்கள் பலரும் தவறான ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.

கொரோனா காரணமாக பலரும் உயிரிழக்கும் நிலையில் திரைத்துறையினரின் பலி எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகர் மனோ பாலா தனது சமூகவலைதளத்தில் மிகவும் சோர்வாக இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர, அவருக்கு கொரோனா என்று ரசிகர்கள் தானாகவே முடிவு செய்து, பலரும் குணமாக நம்பிக்கை தெரிவித்தனர். பலரும் ஒரு படி மேலே போய் அவர் இறந்துவிட்டதாக நினைத்து அஞ்சலிகளையும் செலுத்த ஆரம்பித்தனர்.

ஆனால் மனோபாலாவின் நண்பர்கள் பலரும் அவர் நன்றாக இருப்பதாகக் கூறினர். இந்த குழப்பங்களுக்கு பதிலளிக்கும் விதமாக மனோ பாலா ’ என் அன்பு மக்களே...நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்..ஒண்ணுமில்லை...அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..’ எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :