1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (15:59 IST)

கொரோனா பணிக்கு நர்ஸ் மாணவிகளை பயன்படுத்துங்கள்: மத்திய சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் பணிக்கு நர்சுகள் பற்றாக்குறை இருந்தால் மூன்றாம் ஆண்டு நர்ஸ் மாணவிகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநில சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக அதிகரித்து வருவதை அடுத்து மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
 
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் மருத்துவக்ரள், நர்சுகள் பற்றாக்குறை காரணமாக மத்திய சுகாதாரத்துறை இது குறித்து அனைத்து மாநில சுகாதார அமைச்சகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது
 
அந்த கடிதத்தில் பிஎஸ்சி நர்சிங் மூன்றாவது ஆண்டு மற்றும் நான்காவது ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளை கொரோனா பணிக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என  குறிப்பிடப்பட்டுள்ளது