வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (14:51 IST)

ஜல்லிகட்டிற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவித்து மக்களை  கட்டுப்பாடுகளுடனும் பாதுகாப்புடனும் இருக்க தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்று பலரும் கவலையில் இருந்தனர்.
 
இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 300 மாடுபிடி வீரர்களை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளித்துள்ளது. இதற்காக 2 நாட்களுக்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், போட்டிகளை காண 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு அரசாணையில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.