திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (18:17 IST)

இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாளி நாடுகள்: அமெரிக்க நிதி அமைச்சர்

yellen
இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாளி நாடுகள்: அமெரிக்க நிதி அமைச்சர்
இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையாகவே கூட்டணி நாடுகள் என அமெரிக்க நிதி அமைச்ச ஜெனட் எல்லன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் எல்லன் இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் அவர் நேற்று நொய்டாவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தியாவும் அமெரிக்காவும் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை போராட்டம் மூலம் பெற்றதாக தெரிவித்தார் 
 
இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையாகவே கூட்டாளி நாடுகள் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடன் பொருளாதார உறவை வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார் 
 
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டால் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்ய முடியும் என்றும் இரு நாட்டின் மக்களும் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் விரைவில் அவர் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Mahendran