பேட்டிங்ல பிரச்சினையில்ல.. பவுலிங்தான் சொதப்பிட்டு..? – தோல்வி குறித்து ரோகித் சர்மா!
நேற்றைய உலகக்கோப்பை டி20 அரையிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் நேற்று இங்கிலாந்து – இந்தியா அணிகள் போட்டியிட்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டே இழக்காமல் 16 ஓவர்களில் 170 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றினர்.
இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியுள்ள அணியின் கேப்டன் ரோகித் சர்மா “நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் நன்றாக விளையாடி நல்ல ஸ்கோரை பெற்றோம். ஆனால் பவுலிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் நினைத்தது போல பந்துவீச்சு அமையவில்லை.
புவனேஷ்குமார் பந்து வீசிய முதல் ஓவரிலேயே பந்து ஸ்விங் ஆனது. ஆனால் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்யவில்லை. இந்த மைதானத்தில் எந்த பகுதியில் எளிதாக ரன் எடுக்க முடியும் என தெரிந்தும் சரியான திட்டங்களை செயல்படுத்த தவறிவிட்டோம்” என கூறியுள்ளார்.
Edit By Prasanth.K