வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (08:24 IST)

கட்சியில இல்லாட்டியும் யாத்திரை வருவேன்! – ராகுலின் கையை பிடித்த ஊர்மிளா!

Bharat Jodo Yatra
நாடு முழுவதும் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் அதில் நடிகை ஊர்மிளா மடோன்கரும் கலந்து கொண்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறாக அவர் சமீபத்தில் நடத்திய பார்த் ஜோடோ யாத்ரா என்ற தேசிய ஒற்றுமை நடைபயணம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தொடங்கி பல மாநிலங்களை கடந்து தற்போது காஷ்மீரில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா நடந்து வருகிறது. இந்த யாத்திரையில் பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் ராகுல் காந்தியின் கையை பிடித்தபடி பாதயாத்திரை மேற்கொண்டார். 2019க்கு பிறகு அவர் காங்கிரஸிலிருந்து விலகிய நிலையிலும் இந்த யாத்திரையில் கலந்து கொண்டார்.

அதுபோல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன், லடாக் பிராந்திய காங்கிரஸ் தலைவர் நவங் ரிக்சின் ஜோரா உள்ளிட்ட பலரும் யாத்திரையில் கலந்து கொண்டனர்.

Edit by Prasanth.K