ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2024 (18:03 IST)

பயங்கரவாதி தொடர்ந்த வழக்கில் தேவையற்ற நடவடிக்கை.! அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு..!!

Terrorist Pannoon
காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா சம்மன் அனுப்பியது முற்றிலும் தேவையற்ற நடவடிக்கை என இந்திய வெளியுறவுத்துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவராக இருப்பவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமையை பெற்றுள்ள இவர் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 
 
தன்னைக் அமெரிக்காவில்  வைத்து கொலை செய்ய இந்தியா முயற்சித்ததாக நியூயார்க்கில் உள்ள தெற்கு மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் பன்னுன் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 21 நாள்களில் பதில் அளிக்க இந்திய அரசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சமந்த் கோயல், ரா ஏஜென்ட் விக்ரம் யாதவ் மற்றும் இந்திய தொழிலதிபர் நிகில் குப்தா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது. 
 
இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த பிரச்னைகள் முதலில் எங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போது, ​​நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். இந்த விஷயத்தில் ஒரு உயர்மட்டக் குழு விசாரணை செய்து வருகிறது.
 
முற்றிலும் தேவையற்ற ஒன்று. எங்கள் நிலைபாட்டை இது மாற்றாது. இந்த வழக்கை தொடர்ந்த நபரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பன்னூனின் வரலாறு நன்கு அறியப்பட்டதாகும். அவர் ஒரு சட்டவிரோத அமைப்பைச் சேர்ந்தவர். சீக்கியர்களுக்கான நீதி என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் பன்னூன்.

 
இந்தியாவுக்கு எதிராகவும் இந்திய தலைவர்களுக்கு எதிராகவும் வெறுப்பூட்டும் பேச்சை பேசி வருகிறார். மிரட்டல்களை வெளியிடுகிறார். 2020ல் அவரை தீவிரவாதியாக இந்தியா அரசு அறிவித்தது என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.