புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2024 (11:34 IST)

அதிகரிக்கும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை.. கடனை குறைத்து வருகிறது பி.எஸ்.என்.எல்..!

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அதிக சந்தாதாரர்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் கடன்களும் குறைந்து வருவதாகவும் வருவாய் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திடீரென கட்டணத்தை உயர்த்திய நிலையில் பிஎஸ்என்எல் சேவைக்கு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு அதிரடி சலுகை திட்டங்களை வெளியிட்டு வருகின்றது. 
 
இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு கடந்த 2022ஆம் ஆண்டு 40 ஆயிரத்து 400 கோடி கடன் இருந்த நிலையில் தற்போது அது 23 ஆயிரத்து 297 கோடியாக குறைந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வருமானம் அதிகரித்து வருவதாகவும் இதனால் கடன் குறைந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது 4ஜி சேவைகளை அளித்து வரும் பிஎஸ்என்எல் 5G சேவைகளை ஆரம்பித்தால் கடன்கள் முழுவதுமாக தீர்க்கப்பட்டு லாபத்தில் செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran