வக்பு திருத்த மசோதா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பா? என்ன காரணம்?
வக்பு வாரிய திருத்த மசோதா நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு பட்ஜெட் தொடரில் தான் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள வக்பு வாரிய சொத்துக்களை நிர்வாகம் செய்யும் வக்பு வாரிய சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி இந்த மசோதா பார்லிமென்ட் கூட்டு குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த விசாரணை இன்னும் முடிவடையாததால், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மசோதா தாக்கல் செய்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இப்போதைக்கு இந்த பிரச்சனை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த மசோதா எப்போது தாக்கல் செய்தாலும், அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் காணும் எதிர்ப்பை பதிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
Edited by Mahendran