புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 28 ஜனவரி 2020 (14:03 IST)

ஓரின சேர்க்கை திருமணத்தை பதிவு செய்யக் கோரி இரு ஆண்கள் வழக்கு ...

கேரள மாநிலம் கொச்சி பகுதியில் வசித்து வருபவர் நிகேஷ். அவரது நண்பர் சோனு. ஓரின சேர்க்கையாளர்களான இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் ,எந்த மதத்தினரும் இவர்கள் இருவரின் திருமணத்தை நடத்தி வைக்க முன்வரவில்லை என தெரிகிறது.
 
இதனையடுத்து, நிகேஷ் - சோனு ஒருவரும்  தங்களின் திருமணத்தைப் பதிவு செய்ய திருமண பதிவு அலுவலரை அணுகியபோது அவரும் திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்துவிட்டார்.
 
இதனைத்தொடர்ந்து சோனு - நிகேஷ் இருவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில்,கடந்த 2018 ஆம் ஆண்டு, நவ்தேஜ் சிங் ஜோகர் என்பவர் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்  தொடந்த வழக்கில்,  ஓரின சேர்க்கை தவறல்ல என்று தீர்ப்பு கூறியது. அதேபோல் ஓரின சேர்க்கையாளர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.
 
ஆனால்,எங்கள் திருமணத்தை கேரளாவில் எங்கள் திருமணத்தை பதிய மறுத்து அவமரியாதை செய்தனர்.எங்களின் திருமணத்தை பதிவு செய்து எங்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் கருத்து தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர்.