1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (12:58 IST)

சிறுமிகளை கடித்த பாம்பு: பெற்றோர் மூட பழக்கத்தால் உயிரிழந்த சிறுமிகள்

Snake
இரண்டு சிறுமிகளை பாம்பு கடித்த நிலையில் பெற்றோர் மூட பழக்கத்தால் இரண்டு சிறுமிகளும் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் நள்ளிரவில் இரண்டு சிறுமிகளை விஷப்பாம்பு கடித்தது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் செல்லாமல் சாமியாரிடம் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர்
 
அந்த சாமியார் இரண்டு சிறுமிகளுக்கும் சிகிச்சை அளித்த நிலையில் 2 சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.   2 சிறுமிகளையும் சாமியாரிடம் கொண்டு சென்றபோது அந்த சாமியார் சிறுமிகளை தலையில் துடைப்பத்தால் அடித்து மந்திரம் ஓதி சிகிச்சை அளித்ததாகவும் சிகிச்சை அளிக்காததால் அதன் பின்னர் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் அதனால் சிறுமிகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன