வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (22:35 IST)

சிறுவனை கண்டபடி கடித்துக் குதறிய தெருநாய்.. பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!.

DOG BITE
கேரள  மாநிலம் கோழிக்கோட்டில்  12 வயது சிறுவனை,  வேகமாக ஓடிப் பாய்ந்து வந்த  ஒரு தெரு நாய் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு தெருவில் சைக்கிளில் சென்ற சிறுவனை அங்கு இருந்த தெரு நாய் ஒன்று கடித்துக் குதறியது. அப்போது ஒரு குழந்தையும் அருகில் இருந்ததால் அக்குழந்தையை மட்டும் ஒரு பெண் அழைத்துச் சென்றார்.

 
உடலில் பல இடங்களில் கடித்ததில் சிறுவன் தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோ பார்ப்போரை பதறவைப்பதாக உள்ளது.