வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 நவம்பர் 2024 (13:50 IST)

ரயில் வரும்போது ரீல்ஸ் வீடியோ.. 2 வாலிபர்கள் பரிதாப பலி..!

Train Track
ரயில் வரும்போது தண்டவாளத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை அவர்கள் பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றுக்கு சென்று, ரயில் தூரத்தில் வருவதைக் கண்டு தண்டவாளத்தில் நின்றபடி ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

வீடியோ எடுக்கும் ஆர்வத்தில் ரயில் பக்கத்தில் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. தண்டவாளத்தை விட்டு வெளியே வருவதற்குள் ரயில் அவர்கள் மீது மோதியதாகவும், இதில் இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இருவரின் உடலும் சிதறி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரீல்ஸ் வீடியோ மோகத்தில் விலைமதிப்பில்லா உயிரை பலியிட வேண்டாம் என்றும், ஆபத்தான இடங்களில் ரீல்ஸ் எடுக்க வேண்டாம் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.


Edited by Mahendran