வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2024 (07:33 IST)

பட்டாசு விபத்து ஏற்பட்டால் உடனே அழைக்க வேண்டிய எண்கள்: பொது சுகாதார துறை அறிவிப்பு..!

பட்டாசு விபத்து ஏற்பட்டால் உடனே தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் குறித்த விவரத்தை பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பொது சுகாதார சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:

தீபாவளி பண்டிகை நேரத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டால் உடனடியாக 9444340496,  8754448477 மற்றும் 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும்.

பண்டிகை நேரங்களில் சாலை விபத்துக்கள் நேரிடும் என்பதை கருத்தில் கொண்டு சாலைகளில் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம். வெடிகளை திறந்த வெளியில் மட்டும் தான் வெடிக்க வேண்டும். அருகாமையில் தீப்பற்றக்கூடிய பொருட்களை வைத்திருக்கக் கூடாது.

தளர்வான ஆடை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாச பாதிப்பு உள்ளவர்கள் பட்டாசு புகையை சுவாசிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் போதிய அளவில் வைக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.


Edited by Siva