திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 6 மே 2023 (12:37 IST)

நாளை நீட் தேர்வு.. மாணவர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகள்..!

neet
நாளை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகள் இதோ:
 
இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என  3 பாடப்பிரிவுகளில் 180 கேள்விகள் நீட் தேர்வில் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில் இருக்கும் நிலையில் அதில் ஒரு பதிலை தேர்வு செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் உண்டு. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். 
 
நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 720 என்ற நிலையில் மாணவர்கள் ன்கு அறிந்த கேள்விகளை முதலில் எழுத வேண்டும். அதன்பின் தெரியாத கேள்விகளுக்கு யோசித்து எழுத வேண்டும்
 
மாணவர்கள் தங்கள் பதில்களை பால்பாயிண்ட் பேனாவுடன் குறிக்க ஓ.எம்.ஆர். தாள் வழங்கப்படும். எனவே, ஓ.எம்.ஆர். தாளை பற்றியும், அதில் உள்ள பதில்களை எவ்வாறு குறிப்பது என்பது பற்றியும் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
 
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் முழுக்கை சட்டை அணியக்கூடாது, மாணவிகள் காதுகளில் தோடு, மூக்குத்தி, காதுமாட்டி அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது. கிளிப் மாட்டக்கூடாது. மாணவர்கள் பெல்ட் அணியக்கூடாது. கைக்கெடிகாரம், கால்குலேட்டர், தொப்பி, ஹெட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran