1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (19:42 IST)

அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பம் எப்போது? உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

இன்று முதல் பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பம் ஆன்லைனில் வழங்கப்பட்டு வரும் நிலையில் அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டு படிப்புகளுக்கு மே 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க மே 19ஆம் தேதி கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே அரசு கலைக்கல்லூரிகளில் படிக்க விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran