திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 ஜூன் 2021 (16:46 IST)

இன்று மீண்டும் சரிந்தது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 186 புள்ளிகள் சரிவு

கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பங்குச்சந்தை தொடர்ச்சியாக இறங்கி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச் சந்தை குறைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 186 புள்ளிகள் சரிந்து 52,550 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 66 புள்ளிகள் குறைந்து 15,748 புள்ளிகளானது
 
இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர்கள் கூறும் போது உலக அளவில் பங்குச் சந்தை தற்போது குறைந்து வருவதால் இந்தியாவிலும் அதன் தாக்கம் இருக்கிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து மீண்டும் கண்டிப்பாக பங்கு சந்தை உயரும் என்றும் அதனால் முதலீட்டாளர்கள் பயப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளனர் 
 
மேலும் பங்குச்சந்தை குறைந்தாலும் 50 ஆயிரத்துக்கு மேல் சென்செக்ஸ் இருக்கும் வரை எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் ஐம்பதாயிரத்தை விட குறைவாக இருந்தாலே முதலீட்டாளர்கள் அச்சப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்