1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 23 ஜூன் 2021 (16:30 IST)

சென்செக்ஸ் 282 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே வந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக வாங்கி சம்பந்தப்பட்ட பங்குகள் அனைத்தும் உயர்ந்து கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே பங்குச்சந்தை சரிய தொடங்கியது சற்றுமுன் பங்கு சந்தை முடிவடைந்த நிலையில் சென்செக்ஸ் 282.63 புள்ளிகள் இறங்கி உள்ளது என்பதும் 52306.08 என்ற புள்ளியில் வர்த்தகம் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் நிஃப்டி 85.80 புள்ளிகள் இறங்கி 15,656. 95 என்ற நிலையில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது இன்று திடீரென 282 புள்ளிகள் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நாளை மற்றும் நாளை மறுநாளும் பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் குறைய வாய்ப்பிருப்பதாக பங்குச் சந்தை நிபுணர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது