1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 31 மே 2021 (16:42 IST)

வாரத்தின் முதல் நாளிலேயே ஏற்றம் கண்ட பங்குச்சந்தை: மீண்டும் 52 ஆயிரத்தை நெருங்கிய சென்செக்ஸ்

இன்று திங்கட்கிழமை வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது 
 
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை முதல் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏற்றத்தில் இருந்தது
 
இன்று மாலை பங்குச்சந்தை முடிவடையும்போது சென்செக்ஸ் 514 புள்ளிகள் உயர்வடைந்து 51,937 என்ற அளவில் வர்த்தகம் முடிவடைந்தது. அதேபோல் நிப்டி 147 புள்ளிகள் உயர்ந்து 15 ஆயிரத்து 582 என்ற புள்ளியில் முடிவடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகள் உள்பட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளதால் அதில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.72.89 என வர்த்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.