செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (16:14 IST)

வாரத்தின் கடைசி நாளில் ஏற்றத்துடன் முடிவடைந்த மும்பை பங்குச்சந்தை!

வாரத்தின் கடைசி நாளான இன்று மும்பை பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் வாரத்தில் மூன்று நாட்கள் ஏறியும், இரண்டு நாட்கள் இறங்கியும் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சென்செக்ஸ் 52 ஆயிரம் புள்ளிகளை தாண்டி 53 ஆயிரத்தை  தொட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் இன்று வாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று பங்குச் சந்தை இறங்கும் என்று முதலீட்டாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் எதிர்ப்பை மீறி இன்று பங்குச்சந்தை காலை முதலே உயரத் தொடங்கியது. இன்றைய பங்கு சந்தை சற்று முன் முடிவடைந்த நிலையில் சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்ந்து 52925 என வர்த்தக முடிவடைந்தது. அதேபோல் நிப்டி 69 புள்ளிகள் உயர்ந்து 15860 என வர்த்தக முடிவடைந்தது. பெரும்பாலான பங்குகள் இன்று உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்