வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (17:05 IST)

கொரோனாவுக்கு இன்றும் ஒரு போலீஸ் அதிகாரி பலி!

கொரோனா வைரஸால் அப்பாவி பொதுமக்கள் முதல் உயரதிகாரிகள், பதவியில் இருப்பவர்கள் வரை பலர் பலியாகி கொண்டிருக்கும் நிலையில் நேற்று பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா பகுதியில் காவல் துணை ஆணையர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியான அதிர்ச்சியே இன்னும் மீளாத நிலையில் இன்றும் ஒரு காவல்துறை அதிகாரி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
 
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் கொரோனா பாதிப்பால் காவல் அதிகாரி தேவேந்தர் குமார் என்பவர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் அவர் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவுக்கு நேற்றும் இன்றும் என இரண்டு காவல்துறை அதிகாரிகள் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏற்கனவே சென்னை பெரம்பலூர் அருகே உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவருடன் பணிபுரிந்த காவலர்கள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பணிபுரிந்த காவல் நிலையம் முழுவதும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது