திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 29 அக்டோபர் 2020 (11:25 IST)

அரியர் மாணவர்களை ஆல்பாஸ் செய்ய மாநில அரசுக்கு அதிகாரமில்லை: யூஜிசி

சமீபத்தில் தமிழக அரசு தேர்வு கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது. இந்த இதற்கு ஏற்கனவே யூஜிசி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது அரியர் தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே அரியர் மாணவர்கள் தேர்ச்சி செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது யுஜிசி தனது கருத்தை தெளிவாக விளக்கிக் கூறியுள்ளது 
 
அரியர் தேர்வு தேர்வை ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தேர்வுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மட்டுமே மாநில அரசு கோரிக்கை வைக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி தெரிவித்துள்ளது 
 
மேலும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம் என்று யுஜிசி கேள்வி எழுப்பி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது