திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பவித்ரோற்சவம்: நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் விழாவை முன்னிட்டு நாளை முதல் ஆன்லைனில் டிக்கெட் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பவித்ரோற்சவம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான டிக்கெட்டை 2500 ரூபாய் செலுத்திய பக்தர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
நான்கு நாட்களுக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கட் நாளை முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது