1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (11:05 IST)

நாளை தொடங்குகிறது புரட்டாசி மாதம்: இன்றே திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்..!

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் அந்த மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது தெரிந்தது. இந்த நிலையில் நாளை புரட்டாசி முதல் நாள் பிறக்கவிருக்கும் நிலையில் இன்றே திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

சனி ஞாயிறு மற்றும் மிலாடி நபி விடுமுறையை அடுத்து திருப்பதிக்கு வரும் கூட்டம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் நாளை புரட்டாசி மாதம் திறக்க உள்ளதை அடுத்து கூடுதலாக பக்தர்கள் வருகை தந்து கொண்டிருப்பதாகவும் இதனால் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் பக்தர்கள் நிரம்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலவச தரிசன முறையில் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் 15 மணி நேரத்திற்கு பிறகு தான் தரிசனம் கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுவதாகவும் பஸ், கார், வேன் மூலமும் நடைபயணம் மூலமாகவும் திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran