இன்று சனி பிரதோஷம் நாள்: சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!
இன்று சனி பிரதோஷம் நாள் என்பதால் சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ள நிலையில் இன்று சனி பிரதோஷ நாள் என்பதால் கூடுதலாக பக்தர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றன.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பெண்கள் மலையடி வாரத்தில் குவிந்துள்ளனர் என்றும் இன்று காலை ஆறு மணிக்கு ட்ரைலர் நுழைவு வாயிலை திறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறுவர்கள் முதல் பெண்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆவலுடன் மலையேறி சாமி தரிசனம் செய்ததாகவும் சனி பிரதேசத்தின் போது நடந்த சிறப்பு பூஜையை கண்டு களித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர் இளநீர் உள்ளிட்ட 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva