பிட்டுக்கு மண் சுமந்த வைபவம் மதுரையில் நடைபெற உள்ள நிலையில் திருப்பரங்குன்றத்தில் கோயில் கொண்ட முருகப்பெருமான் பாண்டிய மன்னனாக வேடமிட்டு மதுரை நோக்கி பல்லக்கில் புறப்பட்டுள்ளார்.
மதுரையில் பிட்டுக்காக மண் சுமந்த சிவபெருமான் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியந்து. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை பிட்டுத் தோப்பில் சிவபெருமான் பிட்டுக்காக மண் சுமந்த திருவிளையாடல் வைபவம் நடைபெறுகிறது.
இதில் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பாண்டிய மன்னனாக வேடமிட்டு வருவது விசேஷமாகும். இதற்காக இன்று காலை 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகபெருமான் பாண்டிய மன்னன் அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளினார். முருகபெருமானின் பல்லக்கு பசுமலை, பழங்காநத்தம் வழியாக மதுரைக்கு செல்லும் நிலையில் வழியெங்கும் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் முருகனை வழிபட்டு வருகின்றனர்.
திருவிளையாடல் வைபவ நிகழ்ச்சிக்கு பிறகு 17ம் தேதி வரை முருகபெருமான் மதுரையிலேயே பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பின்னர் அன்று மாலை அங்கிருந்து பூப்பல்லக்கில் மீண்டும் திருப்பரங்குன்றம் வந்தடைய உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Edit by Prasanth.K