வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 17 ஜூன் 2020 (22:36 IST)

அரசாங்க அதிகாரியை அறைந்த ’’டிக் டாக் ’’பிரபலம் கைது !

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சோனாலி போகர் பிரபல டிக் டாக் பிரபலம் ஆவார். இவர் சமீபத்தில் விவசாயிகளின் புகார் விண்ணப்பங்களுடன் வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்திக்கச் சென்றார்.

அப்போது , அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சோனாலி திடீரென தனது செருப்பைக் கழட்டி அரசு அதிகாரியான  சுல்தானை சரமாரியக அடிக்க ஆரம்பித்தார். இந்த வீடொயோ சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும் இந்த சம்பவத்தை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் சிங் சுர்ஜோவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சோனாலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோனாலி ,  சுல்தான் சிங் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று ஹிசார் என்ற இடத்தில் சோனாலி, அரசு அதிகாரியை அறைந்ததற்காக கைது செய்யப்பட்டார். ஆனால் உடனடியாக ஹிசாரில் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார்.  அவர் மீது அரசு அதிகாரியை கடமை செய்யவிடாமல் தடுத்தல், கலவரம் ஏற்படுத்துதல், மிரட்டியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.